ராஷ்மிகாவை பற்றி தவறாக பேசினேனா?- சர்ச்சையை முடித்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழில் மட்டுமல்லாது தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக சமீப காலமாக பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாகவே நடித்து வருகிறார். கடந்த வாரம் அவரது நடிப்பில் வெளியான “ஃபர்ஹானா” திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது நிருபர் அவரிடம், “தெலுங்கில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ், “புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் மிகவும் பிடிக்கும்” என பதிலளித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இணையத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், “ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருந்தால் ராஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன்” என கூறியதாக செய்திகள் பரவியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும் எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்துவரும் பேராதரவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என தொடங்கும் அந்த அறிக்கையில்,

- Advertisement -

“அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம் ‘தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும், எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்திருந்தேன். இருப்பினும் துர்திஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை.

இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

- Advertisement -

சற்று முன்