- Advertisement -
Homeசினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட “லால் சலாம்” திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்! தலைவர் வேற லெவலா இருக்காரே!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட “லால் சலாம்” திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்! தலைவர் வேற லெவலா இருக்காரே!

- Advertisement-

“லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.

இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் கிரிக்கெட்டர்களாக நடிக்கின்றனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் கதை என்று சொல்லப்பட்ட ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வந்தது.

அதாவது தமிழ்நாட்டில் எளிமையான குடும்பத்தை சேர்ந்த விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியில் சேரவேண்டும் என்ற கனவோடு முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கான முயற்சியில் அவர்களுக்கு மும்பையில் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அங்கே ஒரு பிரச்சனை ஏற்பட, அங்கு மிகப்பெரிய தாதாவாக இருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு உதவுகிறார். இதுதான் “லால் சலாம்” திரைப்படத்தின் கதை என்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எனினும் இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருவது என்பது அதிகாரப்பூர்வமான தகவல் ஆகும். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “லால் சலாம்” திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement-

இதில் ரஜினிகாந்த் மாஸ் ஆக தென்படுகிறார். ஏற்கனவே இத்திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் அதனை உறுதிபடுத்தும் வகையில் கபில் தேவ் இந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அப்புகைப்படங்கள் இதோ…

“லால் சலாம்” திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்