- Advertisement -
Homeசினிமாசூரிக்கு அஜித் கொடுத்த அற்புதமான அட்வைஸ்! இதை ஆட்டோ பின்னாடியே எழுதலாமே!

சூரிக்கு அஜித் கொடுத்த அற்புதமான அட்வைஸ்! இதை ஆட்டோ பின்னாடியே எழுதலாமே!

- Advertisement-

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக புகழ்பெற்ற சூரி,  “விடுதலை பார்ட் 1” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். சூரி ஒரு காமெடி நடிகர் என்ற ஞாபகமே வரவில்லை எனவும் அந்தளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் எனவும் பார்வையாளர்கள் அவரை புகழ்ந்தனர்.

கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கதாப்பாத்திரத்தில் சூரி மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்தார். போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் தண்டனையை அப்பாவித்தனமாக ஏற்கும் போதும், மக்களோடு மக்களாக தனது காதலிக்கும் ஒரு அவமானகரமான நிகழ்வு நடக்கும்போது அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று உள்ளுக்குள் குமுறும்போதும் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூரி.

இவ்வாறு “விடுதலை பார்ட் 1” மூலம் ஹீரோவாக மக்களின் மனதில் குடியேறியுள்ள சூரிக்கு அஜித்குமார் ஒரு அட்வைஸ் கூறினாராம். “அடுத்தவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை கண்டுகொள்ள வேண்டாம். முதலில் உங்களை நீங்கள் மதிக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். விமர்சனங்களை தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டாம். நம்பிக்கையுடன் இருங்கள் சூரி” என்று அறிவுரை கூறினாராம்.

நடிகர் சூரி பிரபலமான காமெடியனாக வலம் வருவதற்கு முன்பே பல திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் அஜித் நடித்திருந்த “ஜீ” திரைப்படத்தில் கல்லுரி மாணவராக சூரி நடித்திருந்தார். அதன் பின் “வெண்ணிலா கபடிக்குழு” என்ற திரைப்படத்தில் புரோட்டா காமெடி மூலம் புரோட்டா சூரி என்றே அழைக்கபட்டார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடியனாக கலக்கிய சூரி, விஜய், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்தார்.

- Advertisement-

இவ்வாறு காமெடியனாக தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்த சூரி, “விடுதலை” திரைப்படத்தின் மூலம் மிகச் சிறந்த நடிகராக தன்னை வெளிக்காட்டியுள்ளார். இனி வரும் காலங்களில் சூரி பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்