அஜித்குமார் தமிழ் சினிமா ரசிகர்களின் “தல”யாக வலம் வருகிறார் என்றாலும் அவருக்கு பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளதை பலரும் அறிந்திருப்பார்கள். இளம்வயதில் இருந்தே கார் ரேஸ், பைக் ரேஸ் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் அஜித்குமார், ஒரு முறை மிகப்பெரிய விபத்தில் சிக்கினார். அப்போது அவரது முதுகுப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்பட்ட அஜித்குமார், தனது முதுகு பகுதியில் பல முறை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.
ஆனாலும் சற்றும் மனம் தளராத அஜித்குமார் மீண்டும் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபாட்டுக்காட்டி வந்தார். சமீபகாலமாக தனது பைக்கில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட ஐரோப்ப நாடுகளில் சுற்றிக்கொண்டிருந்தார். அதன் பின் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றிவிட்டு பூடான், நேபாள் போன்ற பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறாராம். இதனை தொடர்ந்து “விடாமுயற்சி” திரைப்படத்தின் பணிகள் முடிபடைந்த பிறகு அஜித், உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் குமார் தற்போது பூடான், நேபாள் ஆகிய நாடுகளில் பைக்கில் தனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதிகளில் வானிலை மோசமாக இருக்கிறதாம். ஆதலால் மழை காரணமாக அங்குள்ள சேரும் சகதியுமாக உள்ள இடங்களில் அஜித் பைக் ஓட்டவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவரது உடல் முழுவதும் சேரும் சகதியுமாக ஆகியிருக்கிறது. அவ்வாறு அஜித் சேரும் சகதியுமாக தனது நண்பர்களுடன் அங்குள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்குவதற்காகச் சென்றிருக்கிறார். ஆனால் அந்த ஹோட்டல் நிர்வாகி அஜித்தும் அவருடைய நண்பர்களும் சேரும் சகதியுமாக வந்ததை பார்த்து முகம் சுழித்திருக்கிறார்.
மேலும் அஜித்குமாரை அவருக்கு அடையாளமும் தெரியாமல் போயிருக்கிறது. ஆதலால் அவர்களை உள்ளே விடமறுத்திருக்கிறார். அதன் பின் “இந்த ஹோட்டலில் பல முக்கியமான பிரபலங்கள் தங்கியிருப்பதால் பின் வாசல் வழியாக வாருங்கள்” என கூறியிருக்கிறார். ஆனால் அஜித்குமார் அதற்கு கோபப்படாமல் தன்னடக்கத்தோடு அந்த ஹோட்டலின் பின் வாசல் வழியாக செக் இன் செய்து ஹோட்டல் அறைக்குள் சென்றுள்ளார். இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளிப்போடு இருந்தாலும் இன்னொரு பக்கம் அஜித்தின் தன்னடக்கத்தைபலரும் மெச்சி வருகின்றனர்.