விடாமுயற்சி படத்தில் அஜித்தின் புதிய கெட்டப்?…. வெளியானது சூப்பர் தகவல்…

- Advertisement -

அஜித்குமார் தற்போது “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அஜித்குமாரின் 62 ஆவது படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென  சில காரணங்களால் விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜெக்டில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்துதான் மகிழ் திருமேனி “ஏகே 62” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. அதே போல் “விடாமுயற்சி” என்ற டைட்டிலும் வைக்கப்பட்டது.

- Advertisement -

“விடாமுயற்சி” டைட்டிலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், பலரும் அஜித்தின் “V” சென்டிமெட்ன்ட் காரணமாக இவ்வாறு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்” “விஸ்வாசம்” ஆகிய திரைப்படங்களின் வரிசையில் “ V” எழுத்தில் தொடங்குகிற திரைப்படமாக “விடாமுயற்சி” அமைந்துள்ளது.

அஜித்குமார் தனது கனவுப்பயணமாக உலகப்பயணத்தில் இந்தியாவை முழுவதும் சுற்றிவிட்டார். அதே போல் பூடான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் பைக் டூர் சென்றுவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து “விடாமுயற்சி” திரைப்படத்தில் கலந்துகொள்ளும் அஜித், அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு நவம்பர் மாதம் தனது உலகப்பயணத்தை தொடங்கவுள்ளார். முதல் கட்டமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு பைக் டூர் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தற்போது சென்னை திரும்பிய அஜித், “விடாமுயற்சி” திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது அஜித் தனது லுக்கை இத்திரைப்படத்திற்காக மாற்றியுள்ளாராம். அதன் முதல்படியாக ஹேர் கட் செய்துள்ளாராம். அதே போல் தாடியையும் மொத்தமாக மழித்துள்ளாராம். விரைவில் இத்திரைப்படத்திற்கான லுக் டெஸ்ட்டுக்கான டெஸ்ட் ஷூட் விரைவில் தொடங்கப்படவுள்ளதாம்.

இதில் இருந்து “விடாமுயற்சி” திரைப்படத்தில் தாடி இல்லாமல் அஜித் நடிக்கவுள்ளதாக தெரியவருகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்