ரசிகனை கட்டிப்பிடித்து கதறி அழுத அஜித்… இப்படி எல்லாம் உன்னை பார்த்ததே இல்லையே தல…

- Advertisement -

தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் தொகையில் பாதியை தனது ரசிகர் கூட்டமாக வரித்துக்கொண்டவர் அஜித்குமார். தனக்கு கொடுக்கப்பட்ட “அல்டிமேட் ஸ்டார்” என்ற பட்டத்தை துறந்தவர். தன்னை தல என்று அழைக்கவேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோளும் விடுத்தவர். இவ்வாறு ஒரு எளிமையின் அடையாளமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அஜித்குமார் “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, விக்னேஷ் சிவன் அந்த புராஜெக்ட்டில் இருந்து வெளிவந்துவிட்டார். இதற்கு காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்பட்டன. ஒன்று, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் விக்னேஷ் சிவன் முழு ஸ்கிரிப்ட்டை முடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இரண்டாவது, விக்னேஷ் சிவன் கூறிய கதையில் விஜய்யின் “லியோ”திரைப்படத்தோடு போட்டுப்போடும் அளவுக்கான கன்டென்ட் இல்லை எனவும் கூறப்பட்டது.

- Advertisement -

இதனை தொடர்ந்து “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இதனை உறுதிபடுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்பு “ஏகே 67” திரைப்படத்தின் டைட்டிலையும் அத்திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனரின் பெயரையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதாவது இத்திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என்று டைட்டில் வைத்திருக்கின்றனர். மேலும் ஏற்கனவே வெளிவந்த தகவலுக்கிணங்க மகிழ் திருமேனியே இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

அஜித்குமார் தனது இளம் வயதில் இருந்தே பைக் ரேஸில் ஈடுபாடு கொண்டவர் என்பதை ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அவர் நடித்த “மங்காத்தா”, “வலிமை” ஆகிய திரைப்படங்களில் பைக் சேஸிங்கை வைத்து பல ஸ்டன்ட் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் அஜித்குமார் அடிக்கடி பைக்கில் ஊர் சுற்றுவது வழக்கம். சமீபத்தில் கூட ஐரோப்பா முழுவதும் சுற்றிவிட்டு வந்தார். அதே போல் “விடாமுய்றசி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு உலகம் முழுவதும் பைக்கில் ஒன்றரை வருடங்கள் பயணம் செய்யப்போகிறார் என்று கூறும் செய்திகளும் வெளிவருகின்றன.

- Advertisement -

அஜித் எங்கெல்லாம் பைக் பயணம் செல்கிறாரோ அங்குள்ள மக்களை சந்தித்தால் அவர்களுடன் அஜித் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவருவது வழக்கம். அஜித்குமார் அவரது திரைப்படங்களின் புரோமோஷன்களுக்கு வருவதில்லை என்றாலும் அவரது பைக் டூர் புகைப்படங்களே ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித்குமார் பைக்கில் பயணம் செய்தபோது ஒரு ரசிகருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். மேலும் அந்த ரசிகர் காட்டிய அன்பால் அஜித்குமார் கண்ணிர் வடித்திருக்கிறார். இவ்வாறு அஜித்குமார் ரசிகருடன் நின்று கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்