விலை உயர்ந்த பைக்கை தனது உற்ற நண்பருக்கு பரிசளித்த அஜித்குமார், விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா அரண்டுபோய்டுவீங்க!

- Advertisement -

அஜித்குமார் தனது இளம் வயதில் இருந்தே பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸில் ஈடுபாடு உடையவர் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு பைக் ரேஸில் அடிப்பட்டு அவரது முதுகில் பல அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளது. சமீப நாட்களாக தனது பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அஜித்குமார். இந்த சுற்றுப்பயணத்திற்கு “பரஸ்பர மரியாதை பயணம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த பயணத்தின் முதற்கட்டமாக இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களில் பயணித்தும் நேபாள், பூடான் ஆகிய நாடுகளுக்கு பயணித்தும் சென்னை திரும்பினார். தற்போது அஜித்குமார் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து முடித்துவிட்டு வருகிற நவம்பர் மாதம் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை முழுமூச்சாக தொடங்கவுள்ளார். அதாவது அடுத்த ஒன்றரை வருடங்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முடிவு செய்துள்ளார். அதன் பிறகுதான் சினிமா சார்ந்த பணிகளில் ஈடுபட போகிறார்.

- Advertisement -

சமீபத்தில் அஜித்குமார் “ஏகே மோட்டோ ரைடு” என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிலையில் தற்போது தனது உற்ற நண்பர் ஒருவருக்கு விலையுயர்ந்த பிஎம்டபுள்யூ பைக்கை பரிசாக அளித்துள்ளார்.

அஜித்குமார் பைக்கில் சுற்றுப்பயணம் செல்லும்போது அவருடன் சில நண்பர்களும் பயணிப்பதை நாம் பார்த்திருப்போம். அதில் ஒருவர்தான் சுகத் சத்பதி. இந்த நிலையில் சுகத் சத்பதிக்கு 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள BMW F850GS என்ற பைக்கை பரிசாக அளித்துள்ளார் அஜித்குமார்.

- Advertisement -

இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுகத் சத்பதி, “ எனக்கு இந்த பரிசு ஒரு வாகனம் என்பதையும் தாண்டி மிகப்பெரியது. இதனை அஜித்குமார் அண்ணா எனக்கு பரிசளித்துள்ளார். ஆமாம்! அவர் எனக்கு இந்த அழகான பைக் நான் உலகத்தை சுற்ற போதுமானதாக இருக்கும் என்று எண்ணினார். எந்த பிரதிபலனையும் பாராமல் எனக்கு சிறந்ததை மட்டுமே தரும் ஒரு மூத்த அண்ணனை போல் என்னை உணரவைத்துவிட்டார். நீங்கள் சிறந்தவர் அண்ணா!” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்