அஜித்குமாருக்கு பைக் ரைட் என்றால் உயிர் என்று ரசிகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. அஜித்குமார் தற்போது உலகத்தை பைக்கிலேயே சுற்றி வருவதற்கான முதல் கட்டத்தில் இருக்கிறார்.
“துணிவு” திரைப்படத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் பூடான், நேபாள் ஆகிய நாடுகளிலும் தனது பைக் சுற்றுலாவை முடித்துள்ளார் அஜித். அதனை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பணிகள் நவம்பர் மாதம் முடிவடைந்தபிறகு மீண்டும் தனது பைக் சுற்றுலாவை தொடங்கவுள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இந்த பைக் சுற்றுலாவை தொடரவுள்ளார். அதன் பிறகுதான் தனது சினிமா சம்பந்தப்பட்ட பணிகளை கவனிக்கவுள்ளார்.
இந்த நிலையில் அஜித்குமார் தனது பி ஆர் ஓவான சுரேஷ் சந்திராவின் மூலம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன். “வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள், மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்” என அஜித் கூறியிருக்கிறார்.
மேலும் கூறிய அவர், “மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ‘ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)’ என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோடோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்” என அதில் அஜித்குமார் தனது புதிய நிறுவனத்தை குறித்து குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் தனது நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த அறிக்கை இதோ…