- Advertisement -
Homeசினிமாகுட்டி நயன்தாரா மரணம்?... இணையத்தில் வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்... அடக்கொடுமையே!

குட்டி நயன்தாரா மரணம்?… இணையத்தில் வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… அடக்கொடுமையே!

- Advertisement-

குட்டி நயன்தாரா என இணையவாசிகளால் அழைக்கப்படுபவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் தமிழில் “என்னை அறிந்தால்”, “விஸ்வாசம்” ஆகிய திரைப்படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். அக்கதாப்பாத்திரங்களில் மிகவும் பொருந்திப்போனதால் அனிகாவை அஜித்தின் ரீல் மகள் என்று கூட அழைப்பார்கள். மேலும் இவர் தமிழில் “நானும் ரவுடிதான்”, “மிருதன்”, “மாமனிதன்” ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

தற்போது அனிகா பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் கதாநாயகியாக நடித்த “புட்டபொம்மா” திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் “ஓ மை டார்லிங்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அனிகா, பல முத்தக்காட்சிகளில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோதே அதில் இடம்பெற்ற முத்தக்காட்சிகளால் சலசலப்பு ஏற்பட்டது.

இதில் குறிப்பாக “ஓ மை டார்லிங்” திரைப்படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருந்தது பல சர்ச்சைகளை கிளப்பியது. தற்போது அனிகா சுரேந்திரன் தமிழில் “பி டி சார்”, “வாசுவின் கர்ப்பிணிகள்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இணையத்தில் அனிகா சுரேந்திரன் புகைப்படம் இடம்பெற்ற கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று வைரல் ஆகி வருகிறது.

அந்த போஸ்டரில் ரத்தினம் அவர்களின் தவப்புதல்வி செல்வி ஆர்.நந்தினி 16.07.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனதும் ரசிகர்கள் பலர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement-

ஆனால் இந்த போஸ்டர் அனிகா சுரேந்திரன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஒரு காட்சிக்காக படப்பிடிப்பு தளத்தில் ஒப்பட்டப்பட்டிருந்த போஸ்டர் என்று தெரியவந்துள்ளது.

 

சற்று முன்