- Advertisement -
Homeசினிமாலியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறாரா அர்ஜூன்? திடீரென வெளிவந்த ஆச்சரிய தகவல்…

லியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறாரா அர்ஜூன்? திடீரென வெளிவந்த ஆச்சரிய தகவல்…

- Advertisement-

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீப நாட்களாக இத்திரைப்படத்தை குறித்த தகவல்கள் அடிக்கடி வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் விஜய் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறவைத்துள்ளது.

“லியோ” திரைப்படத்தில் விஜய் கேங்கஸ்டராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே போல் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய பலருமே கூட கேங்கஸ்டராக நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தும் ஒரு கேங்கஸ்டராக நடிக்கிறார் என கூறப்பட்டது. அதே போல் அவர் விஜய்க்கு தந்தையாகவும் நடிக்கிறாராம். இத்தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் தற்போது ரசிகர்களை ஆச்சரியபடுத்துவது போல் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது ஒரு அதிசய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அர்ஜூன் விஜய்க்கு சித்தப்பாவாக நடிக்கிறாராம். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அதே போல் அர்ஜூனும் இத்திரைப்படத்தில் ஒரு கேங்கஸ்டராக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

“லியோ” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

- Advertisement-

“லியோ” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ உட்பட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் (LCU) இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

சற்று முன்