- Advertisement -
Homeசினிமா60 வயதில் இரண்டாவது திருமணம், இணையத்தை கதறவிட்ட விஜய் பட நடிகர்…

60 வயதில் இரண்டாவது திருமணம், இணையத்தை கதறவிட்ட விஜய் பட நடிகர்…

- Advertisement-

விஜய் நடித்த “கில்லி” திரைப்படத்தில் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழில் “தில்”, “ஏழுமலை”, “தமிழன்”, “ஈ”, “ஆறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்பவர். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஆனால் பாலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக வலம் வருகிறார். அதுமட்டுமல்லாது சமீப காலமாக சமூக ஊடகங்களிலும் பிசியாக இருக்கிறார். பல ஊர்களுக்கு சென்று அங்கிருக்கும் பிரபலமான உணவு பண்டங்களை வாங்கி சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60 ஆவது வயதில் ரூபாலி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ரூபாலி மருவா அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவராவார். மேலும் இவர் கொல்கத்தாவில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே ராஜோஷி என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் தற்போது தனது 60 ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தை ஓரளவு ரகசியமாகவே முடித்துள்ளார். அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டத்திற்கு மட்டுமே அழைப்பு விடுத்து இந்த திருமணத்தை முடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement-

ஆஷிஷ் வித்யார்த்தி “கில்லி”, “மலைக்கோட்டை” ஆகிய திரைப்படங்களில் மிகவும் கலகலப்பான குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்