இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவின் கம்மெர்சியல் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார். தற்போது தமிழில் மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களையும் அசரடிக்க களமிறங்கியுள்ளார்.
அட்லி முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “ராஜா ராணி’. இத்திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” என தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தார். இதனை தொடர்ந்து தற்போது அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கி வரும் “ஜவான்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா, யோகி பாபு, பிரியா மணி போன்ற தமிழ் நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும் சானியா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் ஆகிய பாலிவுட் நடிகர்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
“ஜவான்” திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் ஜூன் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளது.
இதனிடையே இயக்குனர் அட்லியின் மனைவியான பிரியா அட்லி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் பல புகைப்படங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அட்லி-பிரியா அட்லி தம்பதியினருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து தற்போது பிரியா அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “எங்களது வாழ்க்கையின் தேவதையின் பெயரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார். அட்லி-பிரியா அட்லி தம்பதியினருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.