“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லீ இயக்குவதாக கூறப்பட்டது. மேலும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அட்லீ, பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து இயக்கி வரும் “ஜவான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் நீண்டுகொண்டே வந்தது. இத்திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் தற்போது செப்டம்பர் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லீ தவறவிட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. அதன் பின் தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் மல்லினேனி விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் இந்த புராஜெக்ட்டை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் விஜய்யின் சம்பளம் தற்போது 100 கோடிகளுக்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இந்த புராஜெக்ட்டை ஆர்.பி.சௌத்ரியால் உறுதி செய்யமுடியவில்லை என தகவல்கள் வெளிவருகின்றன.
இதனை தொடர்ந்து தற்போது “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. மேலும் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இணையத்தில் தகவல்கள் பரவிவரும் நிலையில் தற்போது விஜய்-அட்லீ கூட்டணி குறித்து ஒரு மாஸ் ஆன தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது “ஜவான்” திரைப்படத்தின் பணிகள் தாமதமாகியுள்ளதை நாம் அறிவோம். அட்லீ “ஜவான்” திரைப்படத்தை முடித்துவிட்டு ஜூன் மாதம் வந்துவிடுவார் என நினைத்துதான் விஜய் அட்லீயுடன் இணைய ஒப்புக்கொண்டாராம். ஆனால் “ஜவான்” திரைப்படம் செப்டம்பருக்கு தள்ளிப்போயுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் வெறுமனே உட்கார்ந்திருக்க முடியாது என விஜய் நினைத்தாராம். அதனால்தான் வெவ்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு தற்போது வெங்கட் பிரபுவிடம் தனது 68 ஆவது திரைப்படத்தை ஒப்படைத்திருக்கிறாராம். இதன் மூலம் “தளபதி 69” திரைப்படத்தில் விஜய்-அட்லீ கூட்டணி உறுதியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய்-அட்லீ கூட்டணியில் அமைந்த “தெறி”, “மெர்சல்”, “பிகில்” போன்ற திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆனது. ஆதலால் விஜய்-அட்லீ கூட்டணிக்கு என்று ரசிகர்களிடையே ஒரு தனி வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.