- Advertisement 3-
Homeசினிமாவிஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது… அதுவும் எந்த நாட்டில் தெரியுமா?

விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது… அதுவும் எந்த நாட்டில் தெரியுமா?

- Advertisement-

விஜய் தற்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். ரஜினிக்கு பிறகு அதிக மாஸ் ரசிகர்களை கொண்ட உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். சமீபத்தில் கூட விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூற, அந்த விவகாரத்தில் பல சர்ச்சைகளும் எழுந்தது. அந்தளவுக்கு பல ரசிகர்களின் இதயத்தை ஆக்கிரமித்த நடிகராக இருக்கிறார்.

இவ்வாறு ஒரு உச்ச நடிகராக வலம் வரும் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதுவும் இந்தியாவில் அல்ல, வெளிநாட்டில். அது எந்த நாடு? அப்படி எந்த படத்திற்காக விஜய் விருது பெற்றுள்ளார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

- Advertisements -

ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த “மாஸ்டர்” திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

விஜய் மட்டுமல்லாது பல தமிழ் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. “சார்பட்டா பரம்பரை” சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. “தலைவி” படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரனாவத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது “மாநாடு” திரைப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கிடைத்துள்ளது. அதே போல் “மாநாடு” திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருது வெங்கட் பிரபுவுக்கு கிடைத்துள்ளது.

- Advertisement-

சிறந்த வில்லனுக்கான விருது “மாஸ்டர்” திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்திற்காக பா.ரஞ்சித்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த காமெடி நடிகருக்கான விருது “டாக்டர்” படத்திற்காக ரெடின் கிங்க்ஸ்லிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது “ஜெய் பீம்” படத்திற்காக மணிகண்டனுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது அதே “ஜெய் பீம்” திரைப்படத்திற்காக லிஜோமோலுக்கும் கிடைத்துள்ளது.

இது தவிர ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடன வடிவமைப்பு, சண்டை வடிவமைப்பு, VFX, சவுண்ட் டிசைன் ஆகிய பல்வேறு துறைகளுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்