- Advertisement -
Homeசினிமாவிஜய்யை வைத்து படம் பண்ண மறுத்த பாரதிராஜா... எஸ்.ஏ.சி ஓப்பன் டாக்...

விஜய்யை வைத்து படம் பண்ண மறுத்த பாரதிராஜா… எஸ்.ஏ.சி ஓப்பன் டாக்…

- Advertisement-

தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய். ரஜினிகாந்தை அடுத்து கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக விஜய் வலம் வருகிறார். ஆக்சன், டான்ஸ், ரொமான்ஸ் என கம்மெர்சியல் திரைப்பட ரசிகர்களுக்கு ஆஸ்தான கதாநாயகனாக விஜய் இருக்கிறார்.

விஜய்யின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காற்றியவர் அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். தொடக்கத்தில் விஜய்யை கதாநாயகனாக வைத்து பல திரைப்படங்களை இயக்கினார். அதன் பின் சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரியிடம் எஸ்.ஏ.சி, விஜய்யை வைத்து படம் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ள, அதன்படி அவர் தயாரித்த திரைப்படம்தான் “பூவே உனக்காக”. இத்திரைப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். விஜய்யின் கேரியரிலேயே மிக முக்கிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக இது அமைந்தது.

அதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த விஜய், “திருமலை” திரைப்படத்தின் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாக உருவானார். தற்போது இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய நட்சத்திரமாக திகழ்கிறார். “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்ற சர்ச்சையும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் “கருமேகங்கள் கலைகின்றன” என்ற திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, அதிதி பாலன் போன்ற பலரும் நடித்திருக்கின்றனர்.

- Advertisement-

இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ” நானும் பாரதிராஜாவும் ஒரே காலகட்டத்தில்தான் சினிமாவுக்கு வந்தோம். அவர் முதலில் இயக்குனர் ஆகிவிட்டார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என விரும்பினேன். அதற்கு அவர் ‘நாம நண்பர்களாகவே இருந்துவிடுவோமே. உன்னை எல்லாம் அசிஸ்டென்ட்டா வச்சிக்கமுடியாது’ என சொல்லிவிட்டார். சரி, நானும் டைரக்டர் ஆகி காட்டுறேன் என சொல்லிவிட்டு பிற்காலத்தில் டைரக்டர் ஆனேன்” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “என் மகன் விஜய் நடிகனாக வேண்டும் என்று ஆசைபட்டபோது ஒரு ஆல்பத்தை தயார் செய்துகொண்டு நான் முதலில் போன இடம் பாரதிராஜா அலுவலகம். அப்படிப்பட்ட மிகப் பெரிய இயக்குனர் படத்தில் விஜய் அறிமுகமானால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அவரிடம் சென்று ஆல்பத்தை காட்டியனேன். ‘ஏன்யா என் கிட்ட எதுக்குயா கேக்குற. நீயே உன் பையனை வச்சி டைரக்ட் பண்ணிட வேன்டியதுதானே’ என்று கூறினார். விஜய்யை வைத்து படம் பண்ண மாட்டேன் என மறைமுகமாக அப்படி கூறினார். இதுவும் மிஸ் ஆகிவிட்டது. ஒரு வழியாக இத்திரைப்படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருக்கிறோம்” என மிகவும் வெளிப்படையாக கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்