கடந்த ஆண்டு “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. குறிப்பாக உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது கடந்த மாதம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே வெளியானது. இதில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இத்திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றிருக்கிறது.
எனினும் :பொன்னியின் செல்வன்” நாவலை வாசித்தவர்கள் பலரும் “மணிரத்னம் எங்களை ஏமாற்றிவிட்டார்” என்று மிகவும் கவலையோடு கூறுகின்றனர். அதாவது நாவலில் உள்ளதை படமாக்காமல், மணிரத்னம் வேறு மாதிரியாக படமாக்கியுள்ளார் என்று கூறுகின்றனர். குறிப்பாக ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வது போல் காட்சிப்படுத்தியது பலருக்கும் பிடிக்கவில்லை. ஆதலால் ஒரு பக்கம் இத்திரைப்படத்திற்கு இது போன்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சீயான் விக்ரம், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அதிகாரப்பூர்வமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதாவது “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ.200 கோடிகளை தாண்டி வசூல் செய்து வருகிறதாம். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் ரூ.400 கோடிகள் வசூலான நிலையில், இரண்டாம் பாகம் இப்போதே ரூ.200 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.
Breaking barriers & soaring high. ⚔️ #ps2 #PonniyinSelvan2 pic.twitter.com/X4Ke8SdTX2
— Vikram (@chiyaan) May 1, 2023
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்திற்கு தமிழகத்தில் மட்டுமே அதிகமான வரவேற்பு இருந்ததாக கூறப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. இந்த நிலையில் இரண்டாம் பாகம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகளாவிய வசூலில் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.