தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரை நேஷனல் கிரஷ் என்றும் அழைப்பார்கள். முதலில் கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. அந்த சமயத்தில் கன்னட நடிகரும் இயக்குனருமான ரக்சித் ஷெட்டியை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் பிரேக்கப் செய்துகொண்டார்.
தெலுங்கில் “கீதா கோவிந்தம்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் வாடகை இல்லாமல் குடிப்போகத் தொடங்கினார் ராஷ்மிகா. அத்திரைப்படத்தில் தனது இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை திணறவைத்தார். அதன் பின் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரத்தொடங்கிய ராஷ்மிகா தமிழில், “சுல்தான்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தில் நடித்தார்.
இவ்வாறு தென்னிந்தியா மட்டுமல்லாது ஹிந்தி சினிமாவிலும் தற்போது டாப் நடிகையாக இருக்கிறார். “குட் பாய்”, “மிஷன் மஜ்னு” போன்ற ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, தற்போது “அனிமல்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் “புஷ்பா 2”, “ரெயின்போ” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா சினிமாவில் மட்டுமல்லாது பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ஒரு பியர் கம்பெனி விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதே போல் மெக்டானல்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக திகழ்ந்து வருகிறார் ராஷ்மிகா. அந்த நிறுவனத்திற்காக பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா அளித்த பேட்டி ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா ஒரு பேட்டியில் தான் ஒரு சைவ உணவு பழக்கம் கொண்டவர் என்று கூறியிருந்தார். ஆனால் மெக்டானல்ட்ஸ் நிறுவன விளம்பரங்களில் சிக்கன் பர்கர் சாப்பிடுவது போலவும், சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுவது போலவும் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ரசிகர்களிடையே கொதிப்பலைகள் எழுந்து வருகிறது. “நீங்கள் மட்டும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நல்ல உணவு வகைகளை சாப்பிடுகிறீர்கள். ஆனால் ஏன் ஜங்க் புட் எனப்படும் சிக்கன் பர்கர் போன்ற குப்பை உணவுகளுக்கு புரோமோஷன் செய்கிறீர்கள்” எனவும் “காசுக்காக இப்படி பொயாக நடிக்கலாமா?” எனவும் அவரை விமர்சித்து வருகின்றனர்.