- Advertisement -
Homeசினிமா“லால் சலாம்” திரைப்படத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெர் கேப்டன்?... செம தகவலா இருக்கே!

“லால் சலாம்” திரைப்படத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெர் கேப்டன்?… செம தகவலா இருக்கே!

- Advertisement-

“லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட குளறுபடியால் கிட்டதட்ட 5 நாட்கள் ரஜினிகாந்தின் கால்ஷீட்டை வீணடித்துவிட்டார்கள் என கூறப்பட்டது. ஆதலால் ரஜினிகாந்த் ஃப்ளைட்டில் சென்னை திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளிவந்தது.

ஆனால் தற்போது அந்த குளறுபடிகள் எல்லாம் சரிசெய்யப்பட்டு மீண்டும் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளாராம். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்த ஒரு சூடான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது “லால் சலாம்” திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளாராம். ரஜினிகாந்த் சென்னைக்கு வந்த இடைவெளியில் இதற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement-

“லால் சலாம்” திரைப்படத்தின் கதாநாயகர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கிரிக்கெட் வீரர்களாக இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இருவரும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் காட்சியில் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் உள்ளே வருவதாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

சற்று நேரத்திற்கு முன்பு கபில் தேவ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் “மிகப்பெரிய மனிதருடன் நானும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இப்புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது கபில் தேவ், “லால் சலாம்” திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளிவருகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்