அஜித்குமாருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு என்பது பலரும் அறிந்த ஒன்றே. அஜித்குமார் நடிக்க வந்த புதிதில் ஒரு சாக்லேட் பாயாகவே வலம் வந்தார். பல காதல் திரைப்படங்களில் நடித்து வந்த அஜித், “அமர்க்களம்” திரைப்படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக களமிறங்கினார்.
“அமர்க்களம்” திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது. அஜித்குமார் பைக் ரேஸர் என்பதால் பல விபத்துகளை சந்தித்தவர். அவரது முதுகில் பல முறை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆனாலும் என்றுமே தனது தன்னம்பிக்கையை விடாமல் ஸ்டன்ட் காட்சிகள் பலவற்றில் நடித்தார் அஜித்குமார். ஆதலால் அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை நாயகனாகவே திகழ்ந்து வருகிறார்.
அஜித்குமார் பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கலந்துகொள்வது இல்லை. அவரது திரைப்படங்களுக்கு கூட புரோமோஷன் செய்வது இல்லை. அப்படி இருந்தும் ரசிகர்கள் அவரை உயிருக்கு உயிராக நேசித்து வருகின்றனர்.
எனினும் தங்களை அஜித்குமார் நேரில் சந்திக்க வேண்டும் என பல ரசிகர்கள் விரும்புகின்றனர். சமீபத்தில் வெளிவந்த “துணிவு” திரைப்படத்தின் புரோமோஷனுக்கு அஜித் வருவார் என செய்திகள் பரவியது. ஆனால் அச்செய்திகள் வெறும் புரளி என்று தெரியவந்த பின் ரசிகர்கள் கலங்கிப்போயினர்.
இந்த நிலையில் கடந்த அஜித் பிறந்தநாளில் இருந்து இணையத்தில் ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழாவில் நடிகர் விவேக், ரஜினி, சூர்யா ஆகியோரின் பெயர்களை கூறி அவர்களை வரவேற்றார். அப்போது அஜித்தின் பெயரை அவர் கூற, அங்கே இருந்த ரசிகர்கள் ஆனந்த கூச்சலிட்டனர். விசில் சத்தம் பறந்தது. இதனை பார்த்த விவேக் ஸ்தம்பித்துப்போனார். ரசிகர்களின் விசில் சத்தம் அடங்க பல நிமிடங்கள் ஆனது. அந்த வீடியோ இதோ….