- Advertisement -
Homeசினிமாமுடியப்போகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? இரண்டாம் பாகத்தில் இது தான் என்னுடைய லுக் என புகைப்படத்தை வெளியிட்ட...

முடியப்போகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? இரண்டாம் பாகத்தில் இது தான் என்னுடைய லுக் என புகைப்படத்தை வெளியிட்ட கோபி.

- Advertisement-

விஜய் தொலைகாட்டிச்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல், இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது. ஒரு இல்லத்தரசி தன் வாழ்வில் என்னென்ன கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கிறார், தன்னுடைய விருப்பு, வெறுப்புகளை எப்படி கையாள்கிறார் என்ற கருத்தை மையமாக வைத்து ஆரமிக்கப்பட்ட இந்த சீரியல் தற்போது TRP யில் கலக்கி தருகிறது.

இந்த சீரியலில் பாக்கியாவின் கணவராக நடித்து வரும் கோபியின் நடிப்பு திறனை பாராட்டாதவர்கள் இருக்கவே முடியாது என்ற அளவிற்கு அவர் நடிப்பில் அசத்தி வருகிறார். அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது தனது கருத்துக்களையும், சீரியல் குறித்த தகவல்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

சமீபத்தில் கூட, தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப்போவதாக கூறி இருந்தார். அதே சமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தார். அதில் அவர் வேறொரு நடிகரோடு இருந்ததால், அவர் தான் புதிய கோபியாக இருக்க கூடும் என்று பலரும் யூகித்தனர். ஆனால் உண்மையில் அவர் கோபியின் நண்பன் கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது கோப்பி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தலை முடி எல்லாம் நரைத்து, கையில் ஊற்றுக்கோலுடன் இருக்கக்கூடிய ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், பாக்கியலட்சுமி பார்ட் 2 வில் என்னோட கெட்டப். எப்படி இருக்கு என்று கூறி உள்ளார். இதன் காரணமாக பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவிற்கு வருகிறதா என்று பலரும் யோசிக்க துவங்கி உள்ளனர்.

- Advertisement-

இதையும் படிக்கலாமே: லியோ படப்பிடிப்பில் த்ரிஷாவுக்கு திடீரென அதிர்ச்சியை கொடுத்த படக்குழுவினர்… என்ன நடந்தது தெரியுமா?

TRP யில் நல்ல நிலையில் உள்ளதாலும், முடிவிற்கு வருவது போலான காட்சிகள் எதுவும் சீரியலில் இதுவரை இடம் பெறவில்லை என்பதாலும், சீரியல் இப்போதைக்கு முடிவிற்கு வராது, கோபி ஏதோ விளையாட்டாக பதிவிட்டுள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

சற்று முன்