ஹன்சிகா மோத்வானி தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர். 90’ஸ் கிட்ஸ்களின் மிக விருப்பமான நடிகையாகவும் ரசிகர்களிடம் கொலுக் மொலுக் நடிகை என்று பெயர் பெற்றவராகவும் இருந்தார் ஹன்சிகா.
இவர் சிறு வயதில் இருந்தே கலைத்துறையில் இருக்கிறார். தனது 12 ஆவது வயதிலேயே ஹிந்தி திரைப்படங்களிலும் ஹிந்தி சீரியல்களிலும் நடிக்க தொடங்கிய ஹன்சிகா மோத்வானி, தனது 16 ஆவது வயதிலேயே கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிவிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது தமிழில் “ரவுடி பேபி”, “கார்டியன்”, “காந்தாரி”, “மேன்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பல வருடங்களாக ஹன்சிகா மோத்வானியை குறித்து ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது ஹன்சிகா மோத்வானி சிறுவயதிலேயே ஹீரோயினாக ஆக வேண்டும் என்பதற்காக அவரது தாயார் ஹன்சிகாவிற்கு ஹார்மோன் ஊசிகளை போட்டதாகவும் அதனால்தான் அவரது உடல் சிறு வயதிலேயே வளர்ச்சி பெற்றதாகவும் கூறப்பட்டு வந்தது. இது குறித்து ஒரு முறை அவரது தயாரிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, “இது வெறும் வதந்தி” என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது ஹன்சிகா மோத்வானியே இது குறித்து வாய் திறந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு பேட்டியில் ஹன்சிகா மோத்வானி, “எனது தாய் எனக்கு ஹார்மோன் ஊசிகள் போட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது உண்மையில்லை. ஊசிக்கு பயப்படும் நான் இதுவரை எனது உடலில் ஒரு டேட்டூவை கூட குத்தியது இல்லை. என்னுடைய ஆரம்ப கட்டத்தில் இது போன்ற வதந்தியால் நான் மிகவும் துன்பத்திற்கு உள்ளானேன். பிரபலமாக இருப்பதால் இதுபோன்ற வதந்திகள் பரவுகிறது” என்று கூறி இந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம்.