போண்டா மணி மகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட சிம்பு பட தயாரிப்பாளர்… என்ன மனுஷன்யா!

- Advertisement -

வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் கலக்கியவர் போண்டா மணி. இவர் இடம்பெற்ற காமெடி காட்சிகள் பெரும்பாலும் புகழ்பெற்ற காமெடி காட்சிகளாகவே இருக்கும். “சீப்பை ஒளிச்சி வச்சா மாப்பிள்ளை எப்படி தாலி கட்டுவார்”, “அடிச்சிக்கூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க” போன்ற காமெடி வசனங்கள் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இதனிடையே கடந்த வருடம் போண்டா மணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பல நடிகர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள். எனினும் அவருடன் பல திரைப்படங்களில் நடித்த வடிவேலு அவருக்கு உதவவில்லை என்ற பேச்சுக்கள் அடிப்பட்டன. போண்டா மணி சிகிச்சை பெற்று மீண்டு வந்திருந்தாலும் தற்போது மாதத்திற்கொரு முறை டயாலசிஸ் செய்து வருகிறார். இது ஒரு புறமிருக்க, போண்டா மணியின் மகளான சாய் குமாரி தற்போது பிளஸ் 2 படிப்பை முடித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த பொதுத்தேர்வில் 600க்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் சாய் குமாரியின் கல்லூரி படிப்பிற்கு தற்போது உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

போண்டா மணியின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவரது மகள் சாய் குமாரியை தனக்கு சொந்தமான கல்வி நிறுவனமான வேல்ஸ் யுனிவர்சிட்டியில் சீட்டு வாங்கிக்கொடுத்துள்ளார் ஐசரி கணேஷ். வேல்ஸ் யுனிவர்சிட்டியில் சாய் குமாரி பிசிஏ படிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தான் செய்து தரவுள்ளதாக ஐசரி கணேஷ் அறிவித்து இருக்கிறாராம். இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

ஐசரி கணேஷ், “போகன்”, “எல் கே ஜி”, “கோமாளி”, “மூக்குத்தி அம்மன்” போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக சிலம்பரசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான, “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை ஐசரி கணேஷ்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்