தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் நடிகை ஸ்ரீதேவி. இவர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலும் உச்ச நடிகையாக கொடிகட்டி பறந்தார். எனினும் தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீதேவி, தமிழ் சினிமா ரசிகர்கள் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு இங்குள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் தனியான ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
ஸ்ரீதேவி 1996 ஆம் ஆன்டு பாலிவுட்டின் மிகப் புகழ்பெற்ற தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உண்டு.
இதில் ஜான்வி கபூர் பாலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வருகிறார். இவர் “தடக்” என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடித்த “குஞ்சன் சக்சேனா” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. கார்கில் போரில் போர் விமானியாக பணியாற்றிய முதல் பெண்மணி குஞ்சன் சக்சனா. அவரின் வாழ்க்கை வரலாற்றில் ஜான்வி கபூர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து “ரூஹி”, “குட்லக் ஜெர்ரி”, “மிலி” போன்ற திரைப்படங்களில் நடித்த ஜான்வி, தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ஜூனியர் என்.டி.ஆரின் 30 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே இவர் நடிக்க இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படமாகும்.
இந்த நிலையில் ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அந்த விருது விழாவிற்கு அவர் மிக நீளமான ஆடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அங்கே இருந்த ரெட் கார்பட்டில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது அவர் அணிந்திருந்த நீளமான ஆடையால் பல அவஸ்தைக்கு உள்ளானார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.