டிரௌசரோடு ஆர்யா – வெளியானது காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் மாஸ்சான GLIMPSE வீடியோ

- Advertisement -

மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தன்னுடைய கதாபாத்திரங்களை சிரிப்பாக நடித்துவருகிறார் நடிகர் ஆர்யா. இவர் தற்போது நடித்து வரும் படம் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். இந்த திரைப்படத்தை M.முத்தையா இயக்கி வருகிறார். இதற்கு முன்பு ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படம் எதிர்பாத்த அளவிற்கு செல்லவில்லை. எனினும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் நிச்சயம் மக்கள் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தோடு, Mr.X என்ற திரைப்படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இவரோடு சேர்த்து கௌதம் கார்த்திக்கும் அந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதே போல சார்பட்டா 2 படத்திற்காகவும் ஆர்யா தன்னை தயார் படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் கடினமான உடற் பயிற்சி மேற்கொள்வது போன்ற ஒரு வீடியோ கூட சமூக வலைத்தளங்களில் வெளியானது.

- Advertisement -

இது மட்டும் இன்றி இயக்குனர் சுந்தர்.சி இயக்கித்தில் சங்கமித்ரா திரைப்படம் நிச்சயம் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதில் ஆர்யாவும், விஷாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி கைவசம் ஏகப்பட்ட படங்களில் வைத்துள்ளார் ஆர்யா. இந்த நிலையில் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி உள்ளது.

விருமன், கொம்பன் போன்ற கிராம பின்னணியில் கமர்சியல் படங்களை கொடுத்து வந்த முத்தையா இந்த படத்திலும் கிராம பின்னணியை மையமாக வைத்துதான் இயக்கி உள்ளாரா என்பது தெரியவில்லை. இந்த படத்தை பொறுத்தவரை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிங்கம் புலி, பாக்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படம் ஜூன் 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை இனைந்து தயாரிக்கும் ஜீ ஸ்டுடியோஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்