- Advertisement -
Homeசினிமாஹரியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன், ஏன் தெரியுமா?

ஹரியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த கமல்ஹாசன், ஏன் தெரியுமா?

- Advertisement-

தமிழ் சினிமாவின் கம்மெர்சியல் இயக்குனர்களில் மிகவும் பரபரப்பான இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஹரி. இவரது திரைப்படங்கள் அனைத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆக்சன் கலந்த சென்டிமென்ட் திரைப்படங்களை மிக சிறப்பாக இயக்கும் வல்லமை பெற்ற ஹரி, தனது திரைப்படங்களின் திரைக்கதையை ஜெட் வேகத்தில் நகர்த்துவார்.

ஹரி “தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விக்ரமை வைத்து “சாமி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. ஒரு ஆக்சன் ஹீரோவாக விக்ரம் இத்திரைப்படத்தின் மூலம் உருவானார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “கோவில்”, “தாமிரபரணி”, “சிங்கம்” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களை  கொடுத்தார். சமீபத்தில் கூட அருண் விஜய்யை வைத்து “யானை” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இவ்வாறு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக திகழ்ந்து வரும் ஹரி, கமல்ஹாசனிடம் ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை பின்னாளில் வேறொரு நடிகர் நடித்து படமாகி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அது என்ன படம்? கமல் ஏன் அதில் நடிக்கவில்லை? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

சென்னை பகுதியில் பெட்ரோல் பங்க் முதலாளியாக வலம் வந்த ஞானவேல் என்பவர் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தார். “தமிழ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரி, ஞானவேலிடம் சென்று ஒரு நல்ல கதையை கூறியிருக்கிறார். அந்த கதை ஞானவேலுக்கு பிடித்துப்போக “இதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்?” என கேட்டிருக்கிறார். அதற்கு ஹரி, கமல்ஹாசனின் பெயரை சொல்ல, உடனே தனக்கு தெரிந்தவர்களின் மூலம் கமல்ஹாசனிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கினார். அதன் பின் ஹரியை, கமல்ஹாசனிடம் சென்று கதையை கூறுமாறு அனுப்பினார். ஆனால் அந்த கதை கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லையாம். அதனை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இந்த கதை சரத்குமாருக்கு சென்றிருக்கிறது.

- Advertisement-

சரத்குமார் இந்த கதைக்கு ஓகே சொல்ல, அவ்வாறு உருவான திரைப்படம்தான் “ஐயா”.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்தது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இவ்வாறு கமல்ஹாசன் “ஐயா” படத்தில் நடிக்க மறுக்க, அந்த கதை சரத்குமாருக்கு சென்று ஹிட் அடித்திருக்கிறது.

சற்று முன்