- Advertisement -
Homeசினிமாஇணையத்தில் லீக் ஆன கங்குவா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! சூர்யாவின் மாஸ் கெட்டப்பை பாருங்க!

இணையத்தில் லீக் ஆன கங்குவா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! சூர்யாவின் மாஸ் கெட்டப்பை பாருங்க!

- Advertisement-

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “கங்குவா” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் ஒரு வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது.

சூர்யா இதற்கு முன் இது போன்ற வரலாற்று ஃபேண்டசி திரைப்படத்தில் நடித்ததில்லை என்பதால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இத்திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. தென்னிந்தியாவில் இருந்து பத்து மொழிகளில் வெளியாகவுள்ள முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

“கங்குவா” திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திசா படானி நடித்து வருகிறார். இவர் “கங்குவா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகிறார்.

“கங்குவா” திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சூர்யாவின் கெரியரில் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகிவரும் திரைப்படமாக “கங்குவா” அமையந்துள்ளது.

- Advertisement-

இந்த நிலையில் தற்போது “கங்குவா” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் சிறுத்தை சிவா, திசா படானி, சூர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சூர்யா மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தென்படுகிறார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா “கங்குவா” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் ஒரு வருடத்திற்கு முன்பே நடைபெற்றது. நிஜமான ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அந்த டெஸ்ட் ஷூட் படமாக்கப்பட்டது. வெற்றிமாறன் தற்போது “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். அத்திரைப்படம் முடிவடைந்தபிறகு “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யா, “சூரரைப் போற்று” திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்