- Advertisement -
Homeசினிமாஜப்பான், மேட் இன் இந்தியா- கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் அட்டகாசமான இன்ட்ரோ விடியோ வெளியானது…

ஜப்பான், மேட் இன் இந்தியா- கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் அட்டகாசமான இன்ட்ரோ விடியோ வெளியானது…

- Advertisement-

கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்தார் கார்த்தி.

இந்த நிலையில் கார்த்தி, “ஜப்பான்” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். டிரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சுனில், விஜய் மில்டன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

“ஜப்பான்” திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் இத்திரைப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இதற்கு முன் இயக்குனர் ராஜு முருகன், “குக்கூ”, “ஜோக்கர்”, “ஜிப்ஸி”, ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான “மார்டன் லவ் சென்னை” என்ற Anthology திரைப்படத்தில் “லாலகுண்டா பொம்மைகள்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது “ஜப்பான்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது “ஜப்பான்” திரைப்படத்தின் அட்டகாசமான இன்ட்ரோ வீடியோ வெளிவந்துள்ளது. இதில் கார்த்தி மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இன்று கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இன்ட்ரோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. “ஜப்பான்” திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

இந்த இன்ட்ரோ வீடியோவை பார்க்கும்போது இத்திரைப்படத்தில் கார்த்தி, ஒரு வித்தியாசமான கேங்கஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரியவருகிறது. ஆதலால் இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சற்று முன்