- Advertisement -
Homeசினிமாத்ரிஷாவுக்கு என்னைய விட வயசு கம்மி- கிரீத்தி ஷெட்டிக்கு இப்படி ஒரு நினைப்பு வேறயா?...

த்ரிஷாவுக்கு என்னைய விட வயசு கம்மி- கிரீத்தி ஷெட்டிக்கு இப்படி ஒரு நினைப்பு வேறயா?…

- Advertisement-

தெலுங்கில் தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் கிரீத்தி ஷெட்டி. மேலும் ஆந்திர சினிமா உலகில் டாப் நடிகையாகவும் வலம் வருகிறார். ஹிந்தியில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான “சூப்பர் 30” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் கிரீத்தி ஷெட்டி. அதனை தொடர்ந்து தெலுங்கில் “உப்பண்ணா” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தெலுங்கில் “ஷ்யாம் சிங்கா ராய்”, “பங்காரு ராஜு”, “தி வாரியர்” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த கிரீத்தி ஷெட்டி, தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த “வணங்கான்” திரைப்படத்தில் நடித்தார். ஆனால் “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதால் தற்போது அருண் விஜய் அத்திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனால் அத்திரைப்படத்தில் கிரீத்தி ஷெட்டி நடிப்பாரா என்பது குறித்த கேள்வி எழுந்து வருகிறது.

கிரீத்தி ஷெட்டி, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்த “கஸ்டடி” திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்திருந்தார் கீர்த்தி ஷெட்டி. அப்போது நிரூபர், “உங்களுக்கு பிடித்த நடிகை யார்?” என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த கீர்த்தி ஷெட்டி, “எனக்கு நிறைய நடிகைகளை பிடிக்கும். ஆனால் தற்போது எனக்கு நடிகை த்ரிஷா மேடம் மிகவும் பிடித்திருக்கிறது. அவர் மிகவும் பொலிவோடு இருக்கிறார். மேலும் அவர் பார்ப்பதற்கு என்னை விட இளையவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement-

த்ரிஷா சமீபத்தில்தான் தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். எனினும் முன்பு போலவே இப்போதும் த்ரிஷா தனது அழகில் எந்த வித சமரசமும் இல்லாமல் ஜொலித்து வருகிறார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் த்ரிஷா, தற்போது 2K கிட்ஸ்களையும் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்