- Advertisement -
Homeசினிமாலால் சலாமின் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் இவர்தான்!... வெளிவந்த புதிய...

லால் சலாமின் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர் இவர்தான்!… வெளிவந்த புதிய தகவல்…

- Advertisement-

“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் “லால் சலாம்”. இத்திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் பாலிவுட்டில் வெளிவந்த “கை போ சே” திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது.

“லால் சலாம்” திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஏற்று நடிக்கும் மொய்தீன் கான் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்லாமிய கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “லால் சலாம்” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் நடித்து வரும் மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தை மம்முட்டி நடித்தால் எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்துத்தான் அக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியிருந்தாராம். மம்முட்டிக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது அக்கதாப்பாத்திரம். அதன் பின் இந்த கதையை ரஜினிகாந்திடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.

அப்போது ரஜினிகாந்த், “மொய்தீன் கான் கதாப்பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப்போகிறாய்?” என கேட்க, அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “மம்முட்டியை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன். அவரிடம் சென்று பேசப்போகிறேன்” என கூறியிருக்கிறார். உடனே ரஜினிகாந்த், “அந்த கதாப்பாத்திரத்தில் நானே நடிக்கிறேன்” என கூறியிருக்கிறார். இவ்வாறுதான் “லால் சலாம்” திரைப்படத்திற்குள் ரஜினிகாந்த் வந்திருக்கிறார்.

- Advertisement-

ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், தற்போது “லால் சலாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், “ஜெய் பீம்” பட இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்