நண்பனாக இருந்து எதிரியாக மாறும் அர்ஜூன்…. லீக் ஆனது லியோ படத்தின் டிவிஸ்ட்…

- Advertisement -

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் காஷ்மீர் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை மும்முரமாக நடத்தி வருகின்றனர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் அர்ஜூன் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் இன்று வெளிவந்தது. அதாவது “லியோ” திரைப்படம் ஹாலிவுட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” என்ற திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. அதில் கார்ல் ஃபகோர்டி என்ற டெரரான வில்லன் கதாப்பாத்திரத்தில்தான் அர்ஜூன் “லியோ” படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படத்தில் அர்ஜூன் கதாப்பாத்திரம் குறித்த ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “லியோ” திரைப்படத்தில் அர்ஜூன் விஜய்க்கு நண்பனாக இருந்து ஒரு கட்டத்தில் விஜய்க்கு துரோகம் செய்வது போலான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். இவ்வாறு அர்ஜூன் கதாப்பாத்திரம் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

“லியோ” திரைப்படத்திற்கு பிறகு விஜய், தெலுங்கு இயக்குனர் கோபிச்சந்த் மல்லினேனியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு “தளபதி 68” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்