- Advertisement -
Homeசினிமாலியோ படத்தில் அர்ஜூன் கதாப்பாத்திரம் இதுதான்... இணையத்தில் லீக் ஆன புகைப்படம்...

லியோ படத்தில் அர்ஜூன் கதாப்பாத்திரம் இதுதான்… இணையத்தில் லீக் ஆன புகைப்படம்…

- Advertisement-

விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் காஷ்மீர் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது சென்னைaயில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

“லியோ” திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” என்ற திரைப்படத்தின் ரீமேக் என்று பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும் “லியோ” திரைப்படத்தின் புரோமோ வீடியோவை பார்த்தபோது ஓரளவு “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தின் சாயல் இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் அர்ஜூன் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்தான ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் எட் ஹாரீஸ் ஏற்று நடித்த கார்ல் ஃபகோர்டி என்ற கதாப்பாத்திரத்தில்தான் அர்ஜூன் “லியோ” படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. “ஏ ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்” திரைப்படத்தில் எட் ஹாரீஸ் ஏற்று நடித்த கார்ல் ஃபகோர்டி என்ற கதாப்பாத்திரம் மிகவும் கொடூரமான வில்லன் கதாப்பாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

சற்று முன்