லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா உலகில் மிக முக்கியமாக இயக்குனராக திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.400 கோடிகள் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது.
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார். மேலும் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய பைக்கை பரிசாக அளித்தார்.
“விக்ரம்” திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸுக்குள் (LCU) இடம்பெற்றிருப்பதால் “லியோ” திரைப்படமும் LCUவுக்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் “லியோ” திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ போன்ற பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதால் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இரண்டு திரைப்படங்களில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. அதன்படி ஆர்.ஜே.பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்திலும், இரட்டை ஸ்டன்ட் மாஸடர்களான அன்பறிவு இயக்கும் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்தன.
இதில் தற்போது “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜின் கதாப்பாத்திரம் குறித்து ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் ரியாலிட்டி ஷோ நடப்பது போல் ஒரு காட்சி இருக்கிறதாம். அந்த ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். அதுவும் அந்த கதாப்பாத்திரத்தின் நீளம் ஒரு நிமிடம் கூட இருக்காது என்று கூறப்படுகிறது.