- Advertisement -
Homeசினிமாமாவீரன் வெளியீட்டு தேதி திடீர் மாற்றம்... சூப்பர் ஸ்டாரிடம் இருந்து எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன்...

மாவீரன் வெளியீட்டு தேதி திடீர் மாற்றம்… சூப்பர் ஸ்டாரிடம் இருந்து எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன்…

- Advertisement-

சிவகார்த்திகேயன் நடிப்பில் “மண்டேலா” புகழ் மடோன்னே அஸ்வினின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மாவீரன்”. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இதில் மிஷ்கின் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ மிகவும் தனித்துவமாகவும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருந்தது. சிவகார்த்திகேயனின் கெரியரில் மிகவும் வித்தியாசமான திரைப்படமாக “மாவீரன்” அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“மாவீரன்” திரைப்படம் ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையேதான் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் ஆகஸ்து மாதம் 10 அம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பு வந்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படமும் சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படமும் மோதப்போவதாக இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது “மாவீரன்” படக்குழுவில் இருந்து ஒரு முக்கியமான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதாவது “மாவீரன்” திரைப்படம் ஆகஸ்து மாதம் வெளிவரவில்லை. ஆம்!. “மாவீரன்” திரைப்படத்தை ஜூலை 14 ஆம் தேதி முன்னதாகவே வெளியிடப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் தனியாக களமிறங்குகிறது.

“ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இதற்கு முன் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களால் கேலிக்குள்ளாக்கப்பட்ட நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சுனில், ஜாக்கி செராஃப், விநாயகன், வசந்த ரவி, யோகி பாபு போன்ற பலரும் நடித்துள்ளனர்.

- Advertisement-

சற்று முன்