மீரா ஜாஸ்மின் 90’ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். தொடக்கத்தில் மலையாளத்தில் நடிக்கத் தொடங்கிய மீரா ஜாஸ்மின், மாதவனின் “ரன்” திரைப்படடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பேரழகியாக குடிப்போனார்.
எனினும் ஒரு கட்டத்தில் மீரா ஜாஸ்மின் நடித்த திரைப்படங்கள் சரிவர ஓடவில்லை. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த தமிழ் திரைப்படங்களிலும் மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை. அவ்வப்போது சில மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அத்திரைப்படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இந்த நிலையில் மாதவனின் “ரன்” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மீரா ஜாஸ்மின் தற்போது அதே மாதவன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார்.
ஒய் நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்து இயக்கி வரும் திரைப்படம் “டெஸ்ட்”. இத்திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீரா ஜாஸ்மின் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள மீரா ஜஸ்மின், “ஏற்கனவே அறிமுகமான ஒன்றிற்கு மீண்டும் செல்வது முழுமையான உணர்வை தருகிறது. மேலும் இத்தனை மாற்றத்திற்கு பிறகும் அம்மனிதர்கள் மாறாமல் இருக்கிறார்கள். டெஸ்ட் திரைப்படத்தில் இணைவதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
பல வருடங்கள் கழித்து மீரா ஜஸ்மின் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக அவரை வரவேற்று வருகின்றனர்.