ஆண்ட்டி மாதிரி ஆகிட்டீங்க-குக் வித் கோமாளி மணிமேகலையை உருவ கேலி செய்யும் நெட்டிசன்கள்!

- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கினார் மணிமேகலை. அப்போதே அவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். அதன் பின் ஹுசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மணிமேகலை, சில ஆண்டுகள் எந்த நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டவில்லை.

எனினும் அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குகொண்டார். கடந்த 3 சீசன்களாக பார்வையாளர்களின் ஃபேவரைட் கோமாளியாக வலம் வந்த மணிமேகலை, நான்காவது சீசன் தொடங்கிய சில வாரங்களிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

- Advertisement -

மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு திடீரென வெளியேறியது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. அவர் வெளியேறியதற்கான காரணத்தை மணிமேகலை இதுவரை கூறவேயில்லை. ஆதலால் இணையத்தில் அவர் வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன.

அதாவது கடந்த 3 சீசன்களாக கோமாளியாக இருந்த சிவாங்கி தற்போது குக் ஆகியுள்ள நிலையில் தான் மட்டும் அதே நிலையில் இருப்பதாக ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டானதால் அவர் வெளியேறினார் என்று கூறிவந்தனர். மேலும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். ஆதலால் அவர் வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது. எனினும் இதற்கான உண்மை காரணம் தெரியவில்லை.

- Advertisement -

இந்த சமயத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு மணிமேகலை சற்று வெயிட் போட்டுவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் இணையவாசிகள் பலரும், “ஆண்ட்டி மாதிரி ஆயிட்டீங்களே”, “ஏன் அக்கா இப்படி குண்டா ஆயிட்டீங்க?” “நல்லா சாப்புட்டு வீட்டுல தூங்கப்போய்டீங்க போல” போன்று அவரை உருவ கேலி செய்து வருகின்றனர். இவ்வாறு உருவகேலி செய்பவர்களுக்கு மணிமேகலையின் ரசிகர்கள் பதிலடியும் தந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்