- Advertisement -
Homeசினிமாஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் செய்த காரியத்தால் தீப்பிடித்த திரையரங்கம், தெறித்து ஓடிய பார்வையாளர்கள்

ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் செய்த காரியத்தால் தீப்பிடித்த திரையரங்கம், தெறித்து ஓடிய பார்வையாளர்கள்

- Advertisement-

இந்திய சினிமா ரசிகர்கள் எப்போதும் தங்களது விருப்பமான நடிகர்களை கொண்டாடி தீர்ப்பதில் எந்த குறையும் வைக்க மாட்டார்கள். கட் அவுட்டிற்கு பால் ஊற்றி, விசில் அடித்து ரகளை செய்து திருவிழா போல் கொண்டாடுவதுதான் எப்போதும் வழக்கம். இது ஒரு பக்கம் அன்பின் வெளிபாடு என்று கூறினாலும் மறு பக்கம் இதற்கான விளைவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திரையரங்குகள் சேதமாவதும் உண்டு. கடந்த பொங்கல் அன்று “வாரிசு”, “துணிவு” ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தபோது சென்னையில் ஒரு திரையரங்கம் சேதமானது. கட்டுப்பாடு மீறிய அதீத கொண்டாட்டத்தால் ஒரு உயிர் கூட போனது. இவ்வாறு நடிகர்களை கடவுளாகவும் தலைவனாகவும் பார்ப்பது நமது வழக்கமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் செய்த ஒரு காரியத்தால் ஒரு  திரையரங்கம் தீ பிடித்து எரிந்திருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாள் ஆந்திர ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “சிம்ஹாதிரி” என்ற மாஸ் ஹிட் திரைப்படம் ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர பகுதிகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள அப்சரா திரையரங்கில் ரசிகர்கள் அத்திரைப்படத்தை கொண்டாடி பார்த்தபோது சில ரசிகர்கள் அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரையரங்கிற்குள் பட்டாசு கொளுத்தினார்கள். அப்போது உள்ளே இருந்த சில நாற்காலிகளில் தீ பற்றிக்கொண்டது. அதன் பின் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் பலரும் தெரித்து ஓடினார்கள். உடனடியாக திரையரங்கு நிர்வாகம் தீ பரவாமல் இருக்க பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement-

சற்று முன்