- Advertisement -
Homeசினிமாபருத்திவீரன் புகழ் செவ்வாழை ராசு திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி…

பருத்திவீரன் புகழ் செவ்வாழை ராசு திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி…

- Advertisement-

கடந்த 3 ஆம் தேதிதான் நடிகர் மனோபாலா காலமானார். அவரது இறப்பின் தாக்கத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் வெளிவராத நிலையில் தற்போது திரைத்துறையில் மீண்டும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.

பாரதிராஜா இயக்கிய “கிழக்குச் சீமையிலே” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் செவ்வாழை ராசு. இவர் அதன் பின் “பருத்திவீரன்” திரைப்படத்தில்தான் பெரிதாக பேசப்பட்டார். “பருத்திவீரன்” திரைப்படத்தில் பிணம் திண்ணி என்று கார்த்தியால் கிண்டல் செய்யப்படுவார்.

இவர் படம் நெடுகிலும் வந்தாலும், சிறுவன் கையால் கொட்டு வாங்கும் காமெடி காட்சியின் மூலம் பலரையும் ரசிக்கவைத்தார். அவரது குரல் ஒரு கிராமத்து குரலாகவும் கட்டை குரலாகவும் இருந்தது. அவரது பேச்சில் கிராமத்து நக்கலும் பாமரத்தனமும் கலந்திருக்கும். “பருத்திவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து “வேலாயுதம்” திரைப்படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார் செவ்வாழை ராசு.

இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்தாராம். தனது இளமை காலத்தில் எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களை அடிக்கடி பார்ப்பாராம். அவ்வாறு எம்.ஜி.ஆரின் நடிப்பை வியந்து பார்த்த மனிதர், எப்படியாவது தானும் சினிமாவில் சேர்ந்து நடிகராக வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தாராம். அவ்வாறுதான் பாரதிராஜா “கிழக்குச் சீமையிலே” திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

- Advertisement-

70 வயது மதிக்கத்தக்க நடிகராக இருந்த செவ்வாழை ராசுவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த நிலையில் மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் துர்திஷ்டவசமாக சிகிச்சை பலனின்று இன்று உலகை விட்டு பிரிந்துவிட்டார். இவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து சினிமாத்துறையினரை சேர்ந்தவர்கள் மரணமடைந்து வருவது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சற்று முன்