- Advertisement -
Homeசினிமாகோலிவுட்டில் 300 கோடிகள் வசூல் செய்த திரைப்படங்கள்... இத்தனை படங்களா?

கோலிவுட்டில் 300 கோடிகள் வசூல் செய்த திரைப்படங்கள்… இத்தனை படங்களா?

- Advertisement-

தற்போது தமிழ் சினிமா மார்க்கெட் என்பது முன்பு போல் இல்லை. இப்போது அதன் வியாபாரம் பெருகியுள்ளது. சமீப காலமாக பேன் இந்திய திரைப்படங்கள் அதிகமாக வெளிவரும் நிலையில் தமிழில் பல திரைப்படங்கள் பேன் இந்தியா திரைப்படங்களாக உருவாகி வருகின்றன. அதுவும் அசால்ட்டாக 400 கோடிகளுக்கும் மேலான பட்ஜெட்டில் திரைப்படங்கள் உருவாகின்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மாபெரும் வசூலை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு உலகளவில் சுமார் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் ரூ.300 கோடிகளை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் ரூ.300 கோடிகள் கலெக்சன் அள்ளிய திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

1. கபாலி

ரஜினிகாந்த்- பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான இத்திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.600 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது.

- Advertisement-

2.2.0

ரஜினிகாந்த நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த இத்திரைப்படம் உலகளவில் 500 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது.

3. பிகில்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரூ.300 கோடிகளை வசூல் செய்தது

4. விக்ரம்

கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான “விக்ரம்” திரைப்படம் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது

5. பொன்னியின் செல்வன்-முதல் பாகம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது.

இதன் வரிசையில் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரூ.300 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது.

சற்று முன்