பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தாலும் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தின் மூலம்தான் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவர் 2000 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பிரியங்கா சோப்ரா ஹிந்தியில் டாப் நடிகையாக வலம் வருபவர். ஹிந்தியில் மட்டுமல்லாது சமீப காலமாக ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட பத்து வயது இளமையானவர். ஆதலால் ஒரு பக்கம் இவர்களின் திருமணத்தை பலரும் கேலி செய்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில பேட்டியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, தான் நடிக்க வந்த புதிதில் ஒரு இயக்குனர் தன்னிடம் தவறாக பேசியதாக கூறியிருக்கிறார்.
அதாவது 2002 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா ஒரு ஹிந்தி திரைப்படத்தில் ஒரு பிரபல ஸ்டார் நடிகருடன் நடித்திருக்கிறார். அப்போது அத்திரைப்படத்தின் இயக்குனர் ஒரு காட்சியில் பிரியங்கா சோப்ராவின் ஆடையை கழட்டி உள்ளாடையை காட்ட சொன்னாராம். அதற்கு அவர் அப்படி நடிக்க முடியாது என கூறியிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர், “இவ்வாறு படத்தில் காட்டினால்தான் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள்” என கூறினாராம். இயக்குனர் அவ்வாறு கூறியது பிரியங்கா சோப்ராவிற்கு வேதனையை அளித்ததாம். ஆதலால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டு வெளியேறிவிட்டாராம். இவ்வாறு அப்பேட்டியில் பிரியங்கா சோப்ரா கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.