விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகப்பிரபலமானவர் ரோபோ ஷங்கர். மிமிக்ரியில் பின்னிப்பெடலெடுக்கும் ரோபோ ஷங்கர், விஜயகாந்த் பாடி லேங்குவேஜ்ஜையும் அவரது குரலையும் அப்படியே உள்வாங்கி பிரதிபலிக்ககூடியவர். விஜயகாந்த் போல் செய்யும் மிமிக்கிரி குரலுக்கும் பாடி லேங்குவேஜ்ஜிற்கும் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. எனினும் அதற்கு முன்பே “தர்ம சக்கரம்”, “படையப்பா”, “ஜூட்” போன்ற திரைப்படங்களில் பெயர் குறிப்பிடப்படாத சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
அதன் பின் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”, “வாயை மூடி பேசவும்” போன்ற திரைப்படங்களில் கவனிக்கத்த காமெடி நடிகராக அறியப்பட்ட ரோபோ ஷங்கர், “மாரி”, “த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா” போன்ற பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
குறிப்பாக “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் ரோபோ ஷங்கரின் காமெடி அதிகளவில் ரசிக்கப்பட்டது. தற்போது பல திரைப்படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் ரோபோ ஷங்கர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ரோபோ ஷங்கர் உடல் எடை குறைந்து காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். “ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு” போன்ற கேள்விகள் எழுந்தன. சிலர் மஞ்சள் காமாலை நோயால் ரோபோ ஷங்கரின் உடல் எடை குறைந்துவிட்டதாக கூறி வந்தனர். ஆனால் சமீபத்தில் ரோபோ ஷங்கரின் மனைவி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஜிம்மிற்கு சென்று ஆரோக்கியமான முறையில்தான் உடல் எடையை குறைத்துள்ளார் என கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது காமெடி நடிகர் மதுரை முத்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ரோபோ ஷங்கர் நடனமாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “கம் பேக் அண்ணே, குட் எனர்ஜி” என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரோபோ ஷங்கர் மிகவும் இளமையாக தென்படுகிறார். அவரது நடனம் மிகவும் எனர்ஜிட்டிக்காக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
View this post on Instagram