- Advertisement -
Homeசினிமாசாய் பல்லவி எழுதிய காதல் கடிதம்! வீட்டிற்கு தெரிந்ததால் ரணகளம்? அடப்பாவமே!

சாய் பல்லவி எழுதிய காதல் கடிதம்! வீட்டிற்கு தெரிந்ததால் ரணகளம்? அடப்பாவமே!

- Advertisement-

“பிரேமம்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய் பல்லவி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சாய் பல்லவி தொடக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அப்போட்டியிலிருந்து பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். எனினும் தற்போது சாய் பல்லவி மிகச் சிறந்த நடனக் கலைஞராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பக் கட்டத்தில் “கஸ்தூரி மான்”, “தாம் தூம்” போன்ற திரைப்படங்களில் பெயர் குறிப்பிடப்படாத சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

- Advertisement -

இதனை தொடர்ந்துதான் “பிரேமம்” திரைப்படத்தில் மலர் டீச்சராக வலம் வந்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டார். தற்போது சாய் பல்லவி முன்னணி கதாநாயகியாகவே நடிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான “கார்கி” திரைப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாய் பல்லவி தற்போது கமல்ஹாசன், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சாய் பல்லவி தனது பள்ளிகாலத்து காதல் குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement-

அதாவது சாய் பல்லவி ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சக வகுப்பு மாணவன் ஒருவனை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். அந்த மாணவன் மீது ஒரு இனம்புரிய ஈர்ப்பு ஏற்பட்டு ஏற்பட்டதாம். இதனை அந்த மாணவனிடம் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என நினைத்து சாய் பல்லவி ஒரு காதல் கடிதத்தை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த கடிதத்தை அந்த மாணவனிடம் கொடுப்பதற்கு தயக்கம் ஏற்பட்டதால் அதனை தனது புத்தகத்திற்குள்ளே ஒளித்துவைத்திருக்கிறார்.

எனினும் எதிர்பாராவிதமாக அந்த கடிதம் சாய் பல்லவியின் தாயார் கண்களில் பட்டுவிட, கோபமான தாயார் சாய் பல்லவியை நன்றாக அடித்துவிட்டாராம். இது குறித்து சாய் பல்லவி அப்பேட்டியில் பேசியபோது, “என்னை அம்மா அடித்தது அதுதான் முதல்முறையும், கடைசி முறையும் ஆகும். இப்போது வரை எனது அம்மாவிற்கு கோபத்தை வரவழைக்கும் எந்த வேலையையும் நான் செய்ததில்லை. நம்மை எவ்வளவு செல்லமாக நிலாவை காட்டி சோறூட்டிய தாயாக இருந்தாலும் அவரது கையில் அடிவாங்காத குழந்தைகளே இருக்கமாட்டார்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும் அனைத்து அம்மாக்களும் ஹீரோதான்” என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்