8 கோடி ரூபாய்க்கு புதிய வீடு… சக நடிகைகளின் வாயை பிளக்க வைத்த சமந்தா….

- Advertisement -

தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. நயன்தாராவிற்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் அதிகளவு சம்பளம் வாங்குகிற நடிகை சமந்தாதான். ஒரு திரைப்படத்திற்கு 3 கோடிகளில் இருந்து 4 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

சமந்தா சென்னையை சேர்ந்த பெண். ஆனால் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் சமந்தா. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். மேலும் சமந்தா சமீப காலமாக மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமந்தா பல இடர்பாடுகளை சந்தித்து வருகிறார். எனினும் தனது பேட்டிகளில், தனது நோயுடன் மிகவும் துணிச்சலாக போராடி வருவதாக கூறி வருகிறார்.

- Advertisement -

சமந்தா தற்போது “குஷி”, “சென்னை ஸ்டோரி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான “யசோதா”, “சகுந்தளம்” ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார். இத்திரைப்படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் சமந்தாவின் நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர். இந்த நிலையில் சமந்தா, சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

அதாவது ஹைதராபாத்தில் நனக்ராம்குடா என்ற பகுதியில் 13 மற்றும் 14 ஆவது மாடிகளை இணைத்தவாறு ஒரு ஃபிளாட்டை விலைக்கு வாங்கியுள்ளார் சமந்தா. இந்த வீடு சுமார் 8 கோடிகள் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா ஏற்கனவே ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் ஒரு வீட்டை வாங்கி அதில் வசித்து வருகிறார். இந்த நிலையில்தான் தற்போது இரண்டாவதாக ஒரு ஃபிளாட்டை 8 கோடிகள் மதிப்பில் விலைக்கு வாங்கியுள்ளார்.

- Advertisement -

தற்போது தனது புதிய வீட்டிற்கான இன்டீரீயர் டெக்ரேஷனில் ஈடுபட்டு வருகிறாராம் சமந்தா. இது போக சமந்தா ஏற்கனவே மும்பையிலும் சொந்தமாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்