- Advertisement -
Homeசினிமாலியோவில் விஜய்யின் தந்தை இந்த நடிகர்தான்? அவரும் ஒரு கேங்கஸ்டர்? மாஸ் தகவலா இருக்கே!

லியோவில் விஜய்யின் தந்தை இந்த நடிகர்தான்? அவரும் ஒரு கேங்கஸ்டர்? மாஸ் தகவலா இருக்கே!

- Advertisement-

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய் ஒரு கேங்கஸ்டராக நடிக்கிறார் என தகவல் வருகிறது. அதே  போல் அவரை எதிர்க்க பல கேங்கஸ்டர்கள் படத்தில் இருக்கிறார்கள். அவர்களில் அர்ஜூன், மிஷ்கின் ஆகியோரும் கேங்கஸ்டர்களாக வருகிறார்கள் என கூறப்படுகிறது. இதில் விஜய் ஒரு பெண்ணுக்கு தந்தையாக நடிக்கிறாராம். விஜய்க்கு மகளாக பிக் பாஸ் ஜனனி நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இதில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தும் நடித்து வருகிறார். சஞ்சய் தத் இதற்கு முன் “கே.ஜி.எஃப் 2” படத்தில் டெரரான வில்லனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சஞ்சய் தத் “லியோ” திரைப்படத்திலும் கேங்கஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தில் சஞ்சய் தத், விஜய்யின் அப்பாவாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது கதாப்பாத்திரம் குறித்து முழு விவரம் தெரியவில்லை. எனினும் விரைவில் இது குறித்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement-

“லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 60% நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.

சற்று முன்