- Advertisement -
Homeசினிமாஆட்டோ டிரைவராக மாறிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

ஆட்டோ டிரைவராக மாறிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

- Advertisement-

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களை மயக்கும் வண்ணம் பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். இவர் முதன்முதலில் இசையமைத்த திரைப்படம் “அட்டக்கத்தி”. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆடி போனா ஆவணி”, “ஆசை ஓர் புல்வெளி” போன்ற அனைத்து பாடல்களும் இசைப்பிரியர்களின் விருப்பமான பாடல்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் அசரவைக்கும் பாடல்களை கொடுத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.

இவரது பாடல்களில் இடம்பெறும் கித்தார் இசைக்கு என்று ஒரு தனித்துவம் இருப்பதாக இசை ரசிகர்கள் கூறுவார்கள். அதே போல் கானா பாடல்களில் ஒரு புதுவித முயற்சியை செய்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைத்த “பாரீஸ் ஜெயராஜ்” பட ஆல்பத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். அதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் கானா பாடல்கள் என்றாலும் மிகவும் தனித்துவமான இசையை கொடுத்திருந்தார். சிலர், இதுதான் ஒரிஜினல் கானா என்று புகழ்வார்கள். அந்த அளவுக்கு மக்களின் இசையை உள்வாங்கி வடிவமைக்கக்கூடியவராக திகழ்ந்து வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித் ஆகிய இயக்குனர்களின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக பா.ரஞ்சித் திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக அவர்தான் இசையமைத்து வந்தார். ஆனால் சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் “தசரா” திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த “மைனரு வேட்டி கட்டி” என்ற பாடல் இணையவாசிகளிடையே டிரெண்டிங் பாடலாக வலம் வருகிறது. பலரும் அந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் ஆட்டோ ஓட்டும் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வைரலானதில் இருந்து பலரும் சந்தோஷ் நாராயணன் ஆட்டோ ஓட்டுகிறாரா? என்று பதறிப்போயினர்.

- Advertisement-

ஆனால் சந்தோஷ் நாராயணனோ ஒரு கலகலப்புக்காக அவ்வாறு வீடியோ பதிவேற்றியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அந்த வீடியோவில் தன்னுடன் பணியாற்றுபவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு போகிறார். அந்த வீடியோவின் கேப்ஷன் பகுதியில், “என்னுடைய குழுவை பிக்கப் செய்து வேலைக்கு அழைத்துச்செல்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவரது இசையில் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த “ரகிட ரகிட” பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

சற்று முன்