பாபாஜிக்கு குரல் கொடுத்தது ரஜினி, ஆனால் பாபாஜியா நடிச்சது யார்ன்னு தெரியுமா? பாபா குறித்து இதுவரை யாரும் அறியாத தகவல்…

- Advertisement -

ரஜினிகாந்த் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த “பாபா” திரைப்படத்தை குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இத்திரைப்படம் வெளிவந்தபோது படுதோல்வியடைந்தது. ரஜினிகாந்தின் கனவுத்திரைப்படமாக அமைந்த “பாபா” தோல்வியடைந்ததில் ரஜினி மிகப்பெரும் கவலையில் ஆழ்ந்தார்.

ரஜினிகாந்த் மகா அவதார் பாபாஜி மீது தீவிர பக்தி கொண்டவர். ஒரு முறை பாபாஜியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை ரஜினிகாந்த் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு ஒளிவட்டம் தோன்றியதாம். அதன் தாக்கத்தால் “பாபா” திரைப்படத்தின் கதையை எழுதினாராம். “பாபா” திரைப்படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி மறு வெளியீடு செய்யப்பட்டது. மறு வெளியீட்டிற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

“பாபா” திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் நம்பியார், கவுண்டமணி உட்பட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பாபாஜிக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்திருந்தார். ஆனால் பாபாஜியின் முகம் இருக்கும் இடத்தில் ஒரு ஒளிவட்டம் தென்படும். ஆதலால் பாபாஜியாக யார் நடித்தது என்பது நமக்கு தெரியாது.

இந்த நிலையில் பாபாஜியாக நடித்த நடிகர் குறித்து இது வரை யாரும் அறியாத தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது “பாபா” திரைப்படத்தில் பாபாஜியின் வேடத்தில் நடித்தவர் அதே திரைப்படத்தில் திவ்யானந்த பாரதி என்ற பாத்திரத்தில் நடித்த சாயாஜி ஷிண்டேதான்.

- Advertisement -

சாயாஜி ஷிண்டேதான் அத்திரைப்படத்தில் ரஜினிகாந்தை பாபாஜியிடம் அழைத்துச்செல்வார் என்பதை ரசிகர்கள் பலர் அறிந்திருப்பார்கள். அந்த கதாப்பாத்திரத்தில் நடித்த சாயாஜி ஷிண்டேதான் பாபாஜிக்கு உருவமும் தந்திருக்கிறார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் சாயாஜி ஷிண்டே நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை தயாரித்த ரஜினிகாந்த், சாயாஜி ஷிண்டேக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்கியிருக்கிறார். திவ்யானந்த பாரதி, பாபாஜி என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்ததற்காக அவ்வாறு செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.

- Advertisement -

சற்று முன்