- Advertisement -
Homeசினிமா2026-ல் விஜய் அரசியலுக்கு வருவார்- நானும் தம்பியும் சேர்ந்து மக்களுக்காக போராடப்போறோம்- சீமான் அதிரடி பேட்டி…

2026-ல் விஜய் அரசியலுக்கு வருவார்- நானும் தம்பியும் சேர்ந்து மக்களுக்காக போராடப்போறோம்- சீமான் அதிரடி பேட்டி…

- Advertisement-

பல வருடங்களாகவே விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என்ற பேச்சுக்கள் வலம் வருகின்றன. அவ்வப்போது அதற்கான அறிகுறிகளும் தெரியவருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்குள் நுழைவதன் முதல்முயற்சியாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி அதற்கான கொடியையும் வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட்டனர். அதன் பின் விஜய், மாவட்ட ரீதியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்து கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலில் அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

மேலும் விஜய், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதியை வீட்டிற்கு அழைத்து அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் குறித்து கலந்துரையாடியதாகவும் தகவல் வெளிவந்தது. அதே போல் சமீபத்தில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர். இதன் வரிசையில் கடந்த பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினியை நேரில் சந்தித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நந்தினிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மேலும் விஜய் பிளஸ் 2  பொது தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவியருக்கும், இனி வரவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டந்தோறும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாண-மாணவியருக்கும், பரிசுகளையும் கல்வித்தொகையையும் வழங்கவுள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

- Advertisement-

இவ்வாறு படிபடியாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவர், “கமல் வரும்போது நாம் எந்தளவு வரவேற்றோமோ அதே போல் விஜய் அரசியலுக்கு வரும்போதும் நாம் வரவேற்கவேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனைகளைக்கு நான் மட்டுமே போராடிக்கொண்டிருக்கிறேன், தம்பியும் ஒரு பக்கம் நின்று போராடட்டுமே. அவர் விருப்பப்பட்டால் எங்களோடு சேர்ந்து போராடட்டும் இல்லை என்றால் தனியாக போராட்டட்டுமே” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், “உறுதியாக விஜய் கட்சித் தொடங்கப்போகிறார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு அவர் தயாராக இருப்பாரா என தெரியவில்லை, ஆனால் 2026 ஆம் ஆண்டு நிச்சயம் வந்துவிடுவார். அவர் அரசியலுக்கு வந்தால்தான் சரியாக இருக்கும்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்