- Advertisement -
Homeசினிமாஇசையமைப்பாளராக களமிறங்கவுள்ளார் நயன்தாராவுக்கு குரல் கொடுத்த பாடகி!... வேற லெவல்...

இசையமைப்பாளராக களமிறங்கவுள்ளார் நயன்தாராவுக்கு குரல் கொடுத்த பாடகி!… வேற லெவல்…

- Advertisement-

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கொடிகட்டி பறக்கும் பாடகியாக திகழ்ந்து வருபவர் சக்திஸ்ரீ கோபாலன். ஹை பிட்ச் பாடல்களுக்கு பெயர் போன இவர், “மக்கயாலா மக்கயாலா” (நான்), “நெஞ்சுக்குள்ள” (கடல்), “நான் நீ” (மெட்ராஸ்), போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அக நக” என்ற மனதை கொள்ளை கொண்ட பாடலை பாடியவரும் இவர்தான்.

இதுவரை 70க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள சக்திஸ்ரீ கோபாலன், கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கும் மேலாக இசைத்துறையில் வலம் வருகிறார். இவர் ஒரு பாடகி மட்டுமல்லாது டப்பிங் கலைஞரும் கூட. நயன்தாரா, ஆண்ட்ரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய பலருக்கும் இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரின் குரல் மிகவும் தனித்துவமானவை. இவரின் பெயரை குறிப்பிடவே தேவையில்லை. இவரது பாடலை ஒலிக்கவிட்டாலே போதும். ரசிகர்கள் பலரும் இது சக்திஸ்ரீ கோபாலனின் குரல் என்று அறிந்துகொள்வார்கள். அந்த அளவுக்கு தனது குரலால் பலரையும் மயக்கி வைத்திருப்பவர் இவர்.

ஒரு பாடகர் இசையமைப்பாளராக உருவாவது என்பது சினிமாத்துறையில் மிகவும் சகஜமான ஒன்று. எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வசுதேவன், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், கார்த்திக் போன்ற பாடகர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இவர்களின் வரிசையில் தற்போது சக்திஸ்ரீ கோபாலனும் இணைந்துள்ளார். ஆம்!

அதாவது மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகவுள்ள “டெஸ்ட்” திரைப்படத்திற்கு சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.சசிகாந்த் தயாரித்து இயக்கவுள்ளார்.

- Advertisement-

சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதை நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். சக்திஸ்ரீ கோபாலன் பல இசையமைப்பாளர்களுக்கு பாடியிருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிகம் ஹிட் அடித்த பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்