- Advertisement -
Homeசினிமாஜெயிலுக்கு போறதுக்கு கூட நாங்க ரெடி- திடீரென கொந்தளித்த சாந்தனு... ஏன் தெரியுமா?

ஜெயிலுக்கு போறதுக்கு கூட நாங்க ரெடி- திடீரென கொந்தளித்த சாந்தனு… ஏன் தெரியுமா?

- Advertisement-

சாந்தனு பாக்யராஜ் தற்போது “இராவண கோட்டம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு “மதயானைக் கூட்டம்” என்ற திரைப்படத்தை இயக்கியவர்.

“இராவண கோட்டம்” திரைப்படம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் தண்ணீர் பிரச்சனையின் அடிப்படையை வைத்து உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோதே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளதாக பல சர்ச்சைகள் வெடித்தன. இந்த நிலையில் சாந்தனு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “இராவண கோட்டம் திரைப்படத்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ‘எங்களுக்கு எதிரான திரைப்படம்’ என்று புகார்களை அடுக்கி வருகின்றனரே?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சாந்தனு, “உண்மையை சொல்லும்போது இது போல் நிறைய தடைகள் வரத்தான் செய்யும். ஆனால் நாங்கள் உண்மையை சொல்லாமல் பொய் சொல்லிருந்தால் மட்டும்தான் நாங்கள் பயப்படவேண்டும். நடுத்தரப்பில் இருந்து யாராவது வந்து இந்த படத்தில் ஒரு தரப்பாக மட்டுமே பேசப்பட்டுள்ளதாகவும் எங்கள் மீது தவறு இருப்பதாகவும் கூறினால் நாங்கள் முதல்வரிடம் கூட இந்த படத்தை திரையிட்டுக்காட்ட தயாராக இருக்கிறோம். உண்மையிலேயே நாங்கள் தவறாகத்தான் படம் எடுத்திருக்கிறோம் என்று நிரூபித்தால் நானும் இயக்குனரும் ஜெயில்லுக்கு போகக்கூட தயாராக இருக்கிறோம். எங்களுக்கு தெரியும் நாங்கள் தவறு செய்யவில்லை என்று” என மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனுக்கும் இயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கும் இந்த விவகாரம் குறித்து மிகப்பெரிய வாக்குவாதமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

“இராவண கோட்டம்” திரைப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இதில் பிரபு, இளவரசு போன்ற பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கண்ணன் ரவி என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இவர் துபாயில் மிகப் பெரிய தொழிலதிபராக உள்ளார் என்பதும் தனது காதல் திருமணத்தை பாக்யராஜே முன் நின்று நடத்திவைத்ததால் அந்த நன்றிக்கடனுக்காக சாந்தனுவை வைத்து அவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

சற்று முன்