ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் சிம்ரன். இடுப்பழகி என்று பெயர் பெற்ற சிம்ரன், தமிழின் டாப் மோஸ்ட் நடிகையாக வலம் வந்தார். இவரின் நடனத்தை பார்ப்பதற்கே இவரின் திரைப்படங்களுக்கு செல்வார்கள். அந்த அளவுக்கு தனது கட்டழகால் இளசுகளை வளைத்துப்போட்டவர் சிம்ரன்.
சிம்ரனுக்கென்றே தமிழ்நாட்டில் ஒரு பெரும்பான்மையான ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் விருப்பமான நடிகையாக இப்போதும் திகழ்ந்து வருகிறார்.
சிம்ரன் தமிழில் “வி.ஐ.பி” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே தனது வசீகரத்தால் ரசிகர்களை கவர்ந்த சிம்ரன், அதன் பிறகு தமிழின் டாப் நடிகர்களான கமல்ஹாசன், விஜய், அஜித், பிரசாந்த், சூர்யா, சரத்குமார் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஒரு பேன் இந்திய நடிகையாகவே வலம் வந்தார். மேலும் பிற்காலத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் சிம்ரன்.
சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு தனது நண்பரான தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் சிம்ரன் தயங்காமல் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தார். எனினும் ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்த பிறகு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்கத்தொடங்கினார்.
எனினும் முக்கியமான கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். சமீபத்தில் கூட “மகான்”, “ராக்கெட்ரி” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாகவே நடித்தார். தற்போது பிரசாந்தின் “அந்தகன்”, விக்ரமின் “துருவ நட்சத்திரம்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சிம்ரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவருடன் நடனமாடுவது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். “சிம்ரன் இவ்வாறு நடனமாடுவதை பார்த்து எவ்வளவு வருடங்கள் ஆகிறது” என ரசிகர்கள் அந்த வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.