- Advertisement -
Homeசினிமாஉருவாகிறது சிவா மனசுல சக்தி பார்ட் 2... தயாரிப்பாளராக களமிறங்கும் ஜீவா... யார் இயக்குனர் தெரியுமா?

உருவாகிறது சிவா மனசுல சக்தி பார்ட் 2… தயாரிப்பாளராக களமிறங்கும் ஜீவா… யார் இயக்குனர் தெரியுமா?

- Advertisement-

ஜீவா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “சிவா மனசுல சக்தி” திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற பெற்றத்திரைப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் மிகச் சிறப்பான ரொமான்ட்டிக் காமெடி திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

இத்திரைப்படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது. குறிப்பாக “ஒரு கல் ஒரு கண்ணாடி” பாடல் இப்போதும் காதலர்களின் விருப்பமான பாடலாக அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்தில் சந்தானத்தின் நகைச்சுவை மிகவும் பிரபலமான நகைச்சுவை காட்சிகள் ஆகும். “புரிஞ்சிக்கோ மச்சான், ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்டா” என்ற வசனம் இப்போதும் ரசிகர்களிடையே மிகப் பிரபலமான வசனமாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் ஜீவா சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் பரவியது. அதன்படி நடிகர் ஜீவா தற்போது தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். நடிகர் ஜீவாவின் தந்தையான ஆர்.பி.சௌத்ரியின் நிறுவனம் “சூப்பர் குட் பிலிம்ஸ்”. அதே பாணியில் ஜீவா, “சூப்பர் குட் ஸ்டூடியோஸ்” என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறாராம்.

இதன் முதல் புராஜெக்ட்டாக “எஸ்.எம்.எஸ் 2” திரைப்படத்தை தயாரிக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, முதல் பாகத்தை இயக்கிய ராஜேஷ்தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜீவாவின் கெரியரில் மிகவும் முக்கியமான வெற்றித்திரைப்படமாக அமைந்த திரைப்படமாக “சிவா மனசுல சக்தி” திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில்தான் தற்போது இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஜீவா திட்டமிட்டுள்ளாராம். இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement-

சற்று முன்